ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த 47 வயது நபர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது.
இந்தச் சோகமான நிகழ்வைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான கலவரத்தில் வணிக நிறுவனங்கள் பலத்த சேதமடைந்தன.
பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காகவும், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும் ஐந்து நபர்களைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.