தமிழீழ மக்களின் விடுதலைக்காக , அவர்களுக்கான இறைமையுள்ள நாட்டுக்காக தளராத துணிவோடு களமாடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டு, இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இதனை முன்னிட்டு சிட்னியில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து எழுகைப் பெருநிகழ்வுவை மிகவும் எழுச்சியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நடத்தினர்.
மக்களுக்காக இறுதிமூச்சு இருக்கும்வரை, பின்வாங்காது உறுதியுடன் போராடிய அந்த வரலாற்றுப் பயணத்தையும், அதற்காகத் தங்களை அர்ப்பணித்த மாவீரர்களையும், மக்களையும் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, விடுதலைப் போராட்ட ஆவணக் கண்காட்சி நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது என சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.