மெல்பேர்ன்னின் புகழ்பெற்ற k Flinders Street ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு சுமார் பத்து பேர் கொண்ட குழுவினரிடையே மோதல் வெடித்துள்ளது.
இவ்வாறு மோதலில் ஈடுபட்டவர்கள் machete ரக கத்திகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது,
மேலும் கையில் வெட்டுக் காயங்களுடன் ஒரு சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த வன்முறை தொடர்பாக காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆறு பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களில் 22 வயது இளைஞர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மற்ற ஐந்து சிறுவர்கள் மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.