சிட்னி சிவிக் பூங்காவில் சேதமடைந்த திருவள்ளுவர் சிலையை உரிய வகையில் மீள நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Cumberland நகரசபை உறுப்பினர் Suman Saha இதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேற்படி சிலை விஷமிகளால் உடைக்கப்பட்டதா அல்லது முறையாக வைக்கப்படாததால் அது தலைகீழாக விழுந்ததா என்பது பற்றி இன்னும் தகவல் இல்லை.
எனினும், திருவள்ளுவர் சிலை கீழே விழுந்தமையானது சிட்னி வாழ் தமிழ் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
திருவள்ளுவர் சிலை பாதுகாப்பாக மீண்டும் நிறுவுவதற்குரிய ஏற்பாடுகள் உரிய தரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.