டாஸ்மேனியாவின் Racing துறை அமைச்சரான ஜேன் ஹவ்லெட், எதிர்க்கட்சிகளின் கடும் அரசியல் அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து அவர் பெற்ற பெரும் தொகையிலான சட்டக் கட்டணங்கள் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்த முரண்பட்ட தகவல்களே இந்த பதவி விலகலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
கடந்த இரண்டு வாரங்களில் இவரைச் சேர்த்து இரண்டு அமைச்சர்கள் விலகியிருப்பது முதலமைச்சர் ஜெர்மி ராக்லிபின் அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தனது முடிவை அறிவித்தார்.
இருப்பினும், தனது நற்பெயரைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் டாஸ்மேனியாவின் சிறுபான்மை அரசாங்கத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.