நியூ சவுத் வேல்ஸின் Orange நகருக்கு அருகே நேற்றிரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில அதிர்வு பூமியின் அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக ஜியோசயின்ஸ் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் எந்தவிதமான உயிர்ச்சேதமோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைந்த தீவிரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
1977 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் பதிவான முக்கியமான நில அதிர்வுகளின் வரிசையில் இதுவும் இணைந்துள்ளது.
குறைந்த ரிக்டர் அளவு கொண்ட இத்தகைய நடுக்கங்கள் பொதுவாகப் பாரிய சேதங்களை உருவாக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.