ஆஸ்திரேலியாவில் முதுகலை பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டுள்ள இரண்டாவது உயர்வும் ஆகும்.
இத்தகைய தொடர்ச்சியான விலை உயர்வுகள் தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களை ஆஸ்திரேலியாவிற்கு வருவதிலிருந்து தடைசெய்யக்கூடும் என்று மாணவர் சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நடவடிக்கை திறமையான புலம்பெயர்ந்தோர் வருகையை பாதிப்பதோடு, ஆஸ்திரேலியாவின் நற்பெயரையும் சிதைக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச மாணவர்கள் வெறும் பொருளாதார வருவாய்க்கான கருவிகள் அல்ல, அவர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாக மதிக்கப்பட வேண்டும் என்று முதுகலை மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய உச்ச அமைப்பான ஆஸ்திரேலிய முதுகலை சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.