மெல்போர்னில் வைத்தியசாலையொன்றுக்குக்கு வெளியே நேற்றிரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவர் ஒருவரும், 19 வயது இளைஞனும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிக்கிள்ஹாம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில் லிகான் டிரைவில் உள்ள கிரெய்கிபர்ன் சமூக வைத்தியசாலைக்கு (Craigieburn Community Hospital) வெளியே கண்டெடுக்கப்பட்டார்.
அச்சிறுவன் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக இன்று காலை காவல்துறை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைஊழியர் ஒருவர் சிறுவனுக்கு சிபிஆர் (CPR) வழங்கி காப்பாற்ற முயன்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.