சீனா நடத்திய ஏவுகணைச் சோதனைக்கு எதிராக பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு வலுவான கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீசி வலியுறுத்தினார்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பசிபிக் நாடுகளும் ஒன்றிணைந்து கூட்டுச் செய்தியை அனுப்ப வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் விருப்பமாகும்.
நியூசிலாந்து உள்ளிட்ட சில பசிபிக் நாடுகள், சீனாவின் இச்செயலைக் கண்டித்துள்ளன.
டெல்ஸ்ட்ரா தொலைத்தொடர்பு செயலிழப்பு பொதுமக்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சதி வேலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, டெல்ஸ்ட்ராவின் (Telstra) சேவை முடங்கியதற்கும், சீனா இந்த வாரம் நடத்திய ஏவுகணை சோதனைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று One Nation கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பர்னபி Barnaby Joyce கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா, புதன்கிழமை அன்று நெட்வொர்க் சிக்கல்களைச் சந்தித்தது. இது "சில மொபைல் அழைப்புகள் மற்றும் தரவு (டேட்டா) இணைப்புகளைப் பாதித்தது".
ஆஸ்திரேலிய கிழக்கு நேரப்படி (AEST) காலை 10 மணிக்குள் 90 சதவீதம் சரிசெய்யப்பட்ட இந்தச் சேவை முடக்கம், லட்சக்கணக்கான மொபைல் வாடிக்கையாளர்களைப் பாதித்ததுடன், பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள் (POS machines) மற்றும் வங்கிச் சேவைகளையும் ஸ்தம்பிக்க வைத்தது.