பிரிஸ்பேனில் உள்ள பாடசாலையொன்றில் நடந்ததாகக் கருதப்படும் கத்திகுத்துச் சம்பவத்தில், சிறுவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேனின் தெற்கு வெளிவட்டப் பகுதியான கரவத்தாவில் (Karawatha) அமைந்துள்ள ' Islamic College of Brisbane) என்ற பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அவசரக் கால சேவையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் பிரின்சஸ் அலெக்ஸாண்ட்ரா (Princess Alexandra)வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்த சிறுவனுக்கு நன்கு அறிமுகமான 16 வயதுடைய மற்றொரு சிறுவன், பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.
இச்சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் பொலிஸாரின் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, இது தொடர்பான சிசிடிவி (CCTV) அல்லது டேஷ்கேம் (dashcam) காட்சிகள் ஏதேனும் இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸாரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.