ஈழத் தமிழர்களுக்காக நீண்டகாலமாக ஆதரவளித்து வந்தவரும், அகதிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருமான ஜெசிக்கா அம்மையார் இன்று காலமானார்.
அவர், ஈழத் தமிழர்களின் அவலங்களை உலகிற்கு எடுத்தியம்பிய "Losing Santhia" என்ற நூலை எழுதிய பென் ஹில்லியரின் (Ben Hillier) தாயார் ஆவார்.
'செம்மணி நீதிக்கான' போராட்டத்திற்கு, தமிழீழத்தின் தேசிய நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் தாமே கையால் பின்னிய அழகிய துணியை, தனது அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் அனுப்பி வைத்திருந்தார்.
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும், அகதிகள் உரிமைகளுக்காகவும் அவர் ஆற்றிய நீண்டகால அர்ப்பணிப்பையும் சேவையையும் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வர்.