அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய ஏற்றுமதிகள் மீது இன்று பிற்பகல் முதல் 12.5 சதவீத வரி (Tariff) விதிக்கப்படும் என்பதை டிரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் காலாவதியாகவிருந்த தற்காலிக 10 சதவீத வரிக்கான மாற்று நடவடிக்கையாக இந்த புதிய வரி அமுலுக்கு வருகிறது.
சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் (supply chains) கட்டாய உழைப்பு/அடிமைத்தனம் குறித்து அமெரிக்கா நடத்திய வர்த்தக விசாரணையைத் தொடர்ந்து, கடந்த மாதம் முன்மொழியப்பட்ட இந்த புதிய வரிகள், ஆஸ்திரேலியா மட்டுமின்றி மேலும் பல நாடுகளையும் பாதிக்கும்.
இந்த முன்மொழியப்பட்ட வரிகள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் (ஆஸ்திரேலிய நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:01 மணி) அமுலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இருப்பினும், இங்கிலாந்து (UK) உட்பட சில நாடுகளுக்கு 10 சதவீத குறைந்த அளவிலான வரியே விதிக்கப்படும். அந்த நாடுகள் கட்டாய உழைப்பிற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது.
எனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பில் "எந்தவித நியாயமும் இல்லை" என்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.
"வர்த்தக ரீதியாகவும், கட்டாய உழைப்புக்கு எதிரான நமது நிலைப்பாட்டின் ரீதியாகவும் டிரம்ப் நிர்வாகத்திடம் நாங்கள் தொடர்ந்து இந்த வாதத்தை முன்வைத்து வருகிறோம்," என்று மார்லெஸ் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசின் முறையீடு
இந்த முன்மொழியப்பட்ட வரி விதிப்பை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசு அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டிருந்தது.
விதிவிலக்குகள்
இந்த புதிய வரிகள், வர்த்தகச் சட்டத்தின் வேறு பிரிவின் கீழ் உலோகம் மற்றும் உதிரி பாகங்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகளுடன் கூடுதலாகச் சேர்க்கப்படாது.
அதேபோல், முந்தைய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு இந்தப் புதிய வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் எழுந்த மக்கள் கோபத்திற்கு டிரம்ப் நிர்வாகம் பதிலளிக்கும் வகையில் விலக்கு அளித்த பல உணவுப் பொருட்களும் இதில் அடங்கும்.
தலைப்புகள் சில தரவும்