ஈரானின் அணுஆயுத லட்சியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான ஒப்பந்தம் விரைவாக எட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஈரான் மீதான புதிய தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் கால அவகாசம் கோரியுள்ளதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த வேண்டுகோளின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோல ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான ஈரான் தப்பிப் பிழைப்பதற்காகவும், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் இந்த உறுதிப்பாட்டில் இணைகின்றது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் உடனடியாக எந்தவொரு பகிரங்க அறிக்கையையும் வெளியிடவில்லை.