விக்டோரியா பிராந்தியத்தில் 500 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய இரசாயன பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துவதற்காகவே இது பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாதுகாப்பு தரப்புக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் Wimmera பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது போதைப்பொருள் தயாரிப்புக்குரிய 10 தொன்களுக்கு அதிகமான இரசாயனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இரு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் 59 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னணி தொடர்பில் பலகோணங்களில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.