உலகிலேயே மிகவும் வயதான முதலையெனக் கருதப்பட்ட காசியஸ் முதலை 110 ஆவது வயதில் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உயிரிழந்துள்ளது.
ஒரு தொன்னுக்கும் அதிகமான எடையும் 18 அடி நீளமும் கொண்ட இந்த காசியஸ் உப்புநீர் முதலை , அக்டோபர் மாதம் முதல் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் உயிரிழந்ததாக அவரது பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்தின் கெய்ர்ன்ஸ் கடற்கரையில் உள்ள கிரீன் தீவில் உள்ள மரைன்லேண்ட் மெலனேசியா முதலை வாழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் டார்வினுக்கு தென்மேற்கே உள்ள ஃபின்னிஸ் ஆற்றங்கரையில் சுற்றித் திரியும் போது கால்நடை நிலையத்திற்கு அருகில் 1984 ஆம் ஆண்டு காசியஸ் பிடிபட்டது.
அது பிடிபட்ட நேரத்தில், காசியஸ் 30 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இதுவரை உயிருடன் பிடிக்கப்பட்ட முதலை என்ற சாதனையையும் இது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்.