அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
வடகொரியா கடந்த வியாழக்கிழமை(31) கண்டம் விட்டு கண்டம் பாயும் பரிசோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டு இராணுவப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் கிழக்கு வான்பரப்பில் இந்த கூட்டுப்பயிற்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறனை உறுதி செய்யும் வகையில் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கு-16 போர் விமானங்கள் மற்றும் டீ-1 விமானம் என்பன பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக 3 நாடுகளினதும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியா தனது புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனையை வெற்றிகரமாக பரிசீலித்தது.
தமது இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில் வடகொரியா இந்த பரிசோதனையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வடகொரியாவின் ஆயுத பரிசோதனைக்கு ஆஸ்திரேலியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை வடகொரியா பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.