மெல்பேர்ணில் நேற்று இடம்பெற்ற இரு தீ விபத்து சம்பவங்களின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Frankston South பகுதியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
தீ அணைக்கப்பட்ட பின்னர், வீட்டுக்குள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இதன்பின்னணியில் குற்றச்செயல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதேவேளை, மெல்பேர்ணின் வடமேற்கில் Power Street இல் உள்ள வீடொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ பிவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் மூன்று மணிநேர போராட்டத்துக்கு பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.