முதியோர் பராமரிப்பு இலத்தில் 95 வயது மூதாட்டியொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட நியூ சவூத் வேல்ஸ் பொலிஸ் அதிகாரியொருவர், பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய கிறிஸ்டியன் வைட் என்பவரே பொலிஸ் சேவையிலிருந்து இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
2023 மே 17 ஆம் திகதியே குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் கடந்த புதன்கிழமை மேற்படி பொலிஸ் அதிகாரி குற்றவாளியென கண்டறியப்பட்டார்.
இத்தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டே கிறிஸ்டியன் வைட் பொலிஸ் சேவையில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இவருக்கான தண்டனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வழங்கப்படவுள்ளது.