ஆஸ்திரேலியாவில் 1977இல் இடம்பெற்ற ஈஸி ஸ்ட்ரீட் இரட்டைக் கொலை என அறியப்படும் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நபர், இத்தாலியில் இருந்து 48 வருட தேடுதலுக்கு பிறகு நாடு கடத்தப்பட்டார்.
சுசான் ஆம்ஸ்ட்ராங், மற்றும் சூசன் பார்ட்லெட் ஆகியோர் 1977 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் வீட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
65 வயதான பெரி கோரூம்பிளிஸ் என்ற சந்தேக நபர், டிஎன்ஏ சோதனை முடிவுகளின் படி சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
கோரூம்பிளிஸ் செப்டம்பர் மாதம் இத்தாலியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். உள்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை மதியம் இத்தாலில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இன்றிரவு ஆஸ்திரேலியா வந்திறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டார், தோஹா வழியாக இரண்டாவது விமானத்தில் அவர் மெல்போர்னுக்குத் திரும்புவார். ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறி இருந்த அவருக்கு சர்வதேச பொலிஸார் ஊடக சிவப்பு அபாய அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
சபா.தயாபரன்