தனது பராமரிப்பின்கீழ் இருந்த 11 சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பணியாளருக்கு 18 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Neville Joseph என்றழைக்கப்படும் நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1990 மற்றும் 2003 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே அவர், சிறார்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 2020 இல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2031 இல் அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.