ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 0.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 0.8 வீதமாக பதிவாகியுள்ளது.
வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதமானது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் ஒரு சதவீதமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.
அதேவேளை மத்திய வங்கி அடுத்தவாரம் கூடுகின்றது.
வருட இறுதி கூட்டமென்பதால் வட்டி விகிதம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.