சிட்னி மேற்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் கார் தீ வைப்பு சம்பவம் என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று அதிகாலை 2 மணியளவில் காரொன்றை நிறுத்துவதற்கு முற்பட்டனர். எனினும், கார் நிறுத்தப்படாமல் வேகமாக பயணித்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் அதனை பின்தொடர்ந்து சென்றனர். தப்பிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள், காயமின்றி தப்பினர். சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் மேற்படி இரு சம்பவங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.