கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்பேர்ண், Kurunjang பகுதியிலேயே நேற்றிரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு இளைஞர் குழுக்களுக்கடையில் ஏற்பட்ட மோதலே கடைசியில் கொலைவரை சென்றுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 18 வயது இளைஞனுக்கு துணை மருத்துவர்கள் முதலுதளி அளித்தாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
அத்துடன், காயமடைந்த 15 வயது சிறுவன் ஒருவரும், 22 வயது இளைஞர் ஒருவரும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிசிரிவி கமரா காட்சிகள் அடிப்படையாகக்கொண்டு ஏனையோரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.