தென்பசுபிக் தீவு நாடான வனூவாட்டுவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலைவேளையிலேயே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் கட்டங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
வனூவாட்டு தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வனூவாட்டு தீவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தாயம் திரும்பிவருகின்றனர். இன்றுகூட 144 பேர் பிரிஸ்பேன் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.