மந்துராவின் புறநகர்ப் பகுதியான மெடோ ஸ்பிரிங்ஸில் உள்ள கார்னௌஸ்டி கார்டனில் உள்ள வீட்டில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தீயணைப்புப் படை மற்றும் பல செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்குச் சென்றன.
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவன் பதிலளிக்காத நிலையில் பொலிசார் முதலுதவி அளித்து, அவரை ஆம்புலன்சில் பீல் ஹெல்த் கேம்பஸ{க்கு அழைத்துச் செல்லப்பட்டார், எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
மேலும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.