2024 ஆம் ஆண்டில் 740 இற்கு மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து முறியடித்துள்ளனர்.
2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 1 வரையான காலப்பகுதியில் விமானம்மூலம், கப்பல்கள்மூலம் கடத்திவரப்பட்ட ஹெரோயின், கொக்கைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நத்தார் பரிசுகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்துவைத்து கடத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தொழில்துறை இயந்திரங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் கொல்களன்களில் இருந்தும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பெடரல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.