விக்டோரிய மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலப்பகுதியில் குடும்ப வன்முறைச் சம்பவங்களும், குற்றச்செயல்களும் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன என்று புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் விக்டோரியா மாநிலத்தில் 8 ஆயிரத்து 668 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாளொன்றுக்கு 279 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று குற்றவியல் புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கிறிஸ்மஸ் தினத்தன்று மாத்திரம் 372 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல குற்றச்செயல்களும் அதிகரித்துவருகின்றன. எனவே, இவ்வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சமூகநல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.