நியூ சவூத் வேல்ஸ் மத்திய கடற்பகுதியில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை தேடும் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
மூன்று சிறார்கள் அலையில் அள்ளுண்டுச்சென்ற நிலையில், இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையே தொடர்கின்றது.
பண்டிகை கொண்டாட்டங்களின்போது நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிரித்துவரும் நிலையில், மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகளில் நீராடும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜுலை ஒன்று முதல் இதுவரையான காலப்பகுதியில் கடலில் மூழ்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.