சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் உட்பட 14 நாடுகளை கண்சிமிட்டும் நேரத்தில் சீரிப்பாய்ந்த சுனாமி அலைகள் தாக்கிச் சென்றது.
இந்த அனர்த்தத்தினால் உலகளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல்போனார்கள். லட்சக்கணக்கான சொத்து இழப்பும் ஏற்பட்டது.
சுனாமி அனர்த்தத்தில் 26 ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்தனர்.
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த 23 ஆஸ்திரேலியர்களும், இலங்கைக்கு சுற்றுலாச் சென்றிருந்த மூன்று ஆஸ்திரேலியர்களுமே இவ்வாறு உயிரிழந்தனர்.