மெல்பேர்ண் புறநகர் பகுதியில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான நேற்றிரவு 9.10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரி காயங்களுக்கு உள்ளான இளைஞன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.