விக்டோரிய மாநில லிபரல் கட்சி தலைமைப் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெசுட்டோ நீக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியின் விக்டோரிய மாநில புதிய தலைவராக பிராட் பேட்டின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மாநில நாடாளுமன்றத்தில் இவர் நிழல் பொலிஸ்துறை அமைச்சராக செயற்பட்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் தோல்வியுற்ற பின்னர் ஜோன் பெசுட்டோவின் தலைமைப்பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையிலேயே அவர் நீக்கப்பட்டு,புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
துணை தலைவராக சேம் க்ரோத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.