கிறிஸ்துமஸ் தினத்தன்று நியூ சவூத் வேல்ஸ் கடற்கரையில் அலையில் அள்ளுண்டுச்சென்ற 15 வயது சிறுவன், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று சிறார்கள் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்த நிலையில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மற்றையவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்தது.
இந்நிலையிலேயே இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது. காணாமல்போன சிறுவனின் சடலமே அதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.