சீனாவிலுள்ள ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் எப்பிஐ வைத்திருந்ததாகவும், எனினும், அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அதை தடுத்து நிறுத்தி வைத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையே இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பரில் உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
குனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில் சீனாவின் வூகான் நகரிலுள்ள ஆய்வகச் சோதனையின்போது கொரோனா வைரஸ் கசிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இதை சீனா மறுத்தது.
இந்நிலையிலேயே அமெரிக்க ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.