சூறா தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் கிரேட் பேரியர் ரீஃபின் தெற்கு முனைக்கு அருகில் அமைந்துள்ள கெப்பல் தீவுகள், வெளிப்புற சாகசப் பயணிகளுக்கான ஒரு சுற்றுலா மையமாகும்.
கிரேட் கெப்பல் தீவின் தெற்கே உள்ள ஹம்பி தீவில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற 40 வயது நபரான லூக் வால போர்ட் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுறா அவரது கழுத்தில் கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் அவசர சேவைகள் வால்ஃபோர்டுக்கு சிகிச்சை அளித்தன. எனினும், சிகிச்சை பலனின்றி மாலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
2024 ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்தில் மேலும் நான்கு பேர் சுறாக்களால் தாக்கப்பட்டதாக ஒரு சம்பவ கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார்.
சபா.தயாபரன்.