நியூ சவூத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் ஒரு இலகுரக விமானமொன்று விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் படுகாயமடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.20 மணியளவில் யம்பாவுக்கு மேற்கே உள்ள பால்மர்ஸ் தீவுக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
60 வயது என்று நம்பப்படும் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.மற்றொரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், பலத்த காயங்களுடன் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, அப்பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல் துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
சபா.தயாபரன்.