குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை 128 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
புதிய வகையான கொரோனா அலையே மாநிலத்தை தாக்கி வருகின்றது எனவும், ஆஸ்திரேலியா தென்பகுதியில் இருந்து குறித்த வைரஸ் திரிபு குயின்ஸ்லாந்தை சென்றடைந்திருக்கலாம் என தொற்றுநோய் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிசம்பர் 9 முதல் 15 வரையான காலப்பகுதியில் குயின்ஸ்லாந்தில் நாளாந்தம் 258 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் 65 வயதுக்கு மேற்பட்டோரே அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.