ஒன்லைன்மூலம் தொடர்பை ஏற்படுத்தி 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குயின்ஸ்லாந்தை சேர்ந்த 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி பிரிஸ்பேன் வடக்கு பகுதிக்கு குறித்த சிறுமியை அவர் அழைத்துச்சென்றுள்ளார். அதற்கு முன்னர் இணைய வழியில் தொடர்பில் இருந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய 29 வயது இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டார்.
பலாத்காரம், அநாகரீகமான நடத்தை, போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த இளைஞனுக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.