Hunter Valley பகுதியில் காரொன்றை கடத்திச்சென்ற ஆறு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹண்டர் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் பயணித்த காரொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை பொலிஸார் காண்பித்தனர்.
எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் வேகமாக பயணித்துள்ளது. இதனையடுத்து பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
வாகனத்தில் இருந்த ஆறு சிறார்களும் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். அவர்களை பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.