ஆஸ்திரேலியாவில் ஏறுமுகம் காட்டிய வீடுகளின் விலை வீழ்ச்சி!
ஆஸ்திரேலியாவில் கடந்த ஈராண்டுகளாக தொடர்ச்சியாக அதிகரித்துவந்த வீடுகளின் விலை தற்போது வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
2023 பெப்ரவரி முதல் 2024 ஆம் ஆண்டுவரை சடுதியாக அதிகரித்துவந்த வீடுகளின் விலை, 2024 டிசம்பரில் 0.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஆஸ்திரேலியாவின் ஐந்து பிரதான நகரங்களில் வீடுகளில் விலை 0.2 வீதத்தால் டிசம்பர் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக மெல்பேர்ணில் வீட்டுச் சந்தை மிகப்பெரிய சரிசை சந்தித்துள்ளது. வீட்டு மதிப்பு 0.7 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
பிரிஸ்பேன், பேர்த் ஆகிய நகரங்களில் வீடுகளின் பெறுமதி அதிகரித்துள்ளது எனவும் தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது.