மெல்பேர்ணில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 12 வயது சிறுவர் உட்பட மேலும் சில சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடு உடைப்பு, ஆயுதமேந்திய கொள்ளைகள், கார்க்கொள்ளை உட்பட மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தவர்களை கைது செய்வதற்குரிய விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி 40 பேர்வரை கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலை கல்வி பயிலும் வயதில் உள்ளவர்களாவர்.
கடந்த ஒரு வாரகாலத்துக்குள் கைது செய்யப்பட்டவர்கள், 150 இற்கு மேற்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
19 வயதுக்குட்பட்ட அறுவரில் 12 வயது சிறுவன் ஒருவரும் இருந்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டுள்ளார்.