புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது Virgin Airlines விமான குழு உறுப்பினரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பீஜி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். எதிர்வரும் திங்கட்கிழமை பீஜி நாட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
பீஜியில் சுற்றுலா நகரான நாடியில் கடந்த புதன்கிழமை அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்ணை சேர்ந்த 21 வயதான பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மற்றுமொரு சம்பவத்தில் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆஸ்திரேலியர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பீஜி நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.