நியூ சவூத் வேல்ஸ் வடக்கு கடற்கரை பகுதியில் இலகு ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று பிற்பகல் 4 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கடற்கரையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் விமான சிதைவுகள் காணப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.