விமான பயணத்தின்போது மது அருந்திவிட்டு, அநாகரீகமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Hobart இல் இருந்து சிட்னி நோக்கி நேற்று பயணித்த உள்நாட்டு விமானத்திலேயே இத்தம்பதியினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
மதுபோதையில் காணப்பட்ட இத்தம்பதியினருள், 53 வயதான பெண், விமான கழிப்பறையில் இருந்து வெளியேறும்போது மற்றுமொரு பயணியை தாக்கியுள்ளார். அத்துடன், விமான பயண விதிமுறைகளை மீறும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.