ஆஸ்திரேலிய கூட்டாட்சி நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கையை லேபர் கட்சியின் தலைவர் பிரதமர் அந்தோனீ அல்பானீஸி முன்கூட்டியே ஆரம்பித்துள்ளார்.
இதன்ஓர் அங்கமாக புரூஸ் நெடுஞ்சாலையை மேம்படுத்தும் திட்டம் பற்றிய அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதற்காக கூட்டாட்சி அரசு 7.2 பில்லியன் டொலர்கள் பங்களிப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
1,673 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட புரூஸ் நெடுஞ்சாலை புனரமைப்பில் 80 சதவீத பங்களிப்பை கூட்டாட்சி அரசாங்கம் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலேயே, மக்கள் பாதுகாப்பை கருத்தி இத்திட்டத்துக்காக பெருமளவு நிதி முதலிடப்படுகின்றது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாக்கு வேட்டை நடத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
கூட்டாட்சி தேர்தலில் லேபர் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதிரடி நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.