கத்தியைக் காட்டி பொலிஸாரை மிரட்டினார் எனக் கூறப்படும் 40 வயது நபரொருவர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
அடிலெய்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வீட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை நபரொருவர் கத்தியைக் காட்டி பொலிஸாரை மிரட்டியுள்ளார். அவரை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் ஆரம்பக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செயற்படுத்தினாலும் அவர் தொடர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவருக்கு உடன் முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவத்தில் பொலிஸாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.