இங்கிலாந்தில் விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு செல்லவேண்டுமாயின் ஆஸ்திரேலியர்கள் முன்அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜனவரி 8 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
இங்கிலாந்தின் மின்னணு பயண அனுமதியை பெற வேண்டிய நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்கள் மாத்திரமே மின்னணு பாதுகாப்பு அனுமதியை பெற வேண்டி இருந்தது.
புதிய ஏற்பாடுகளின் பிரகாரம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களும் மேற்படி அனுமதியை பெற வேண்டும்.
இதற்கான கட்டணமாக 10 ஸ்டெர்லிங் பவுண்ட் செலுத்த வேண்டும்.