மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலாத் தலமான Rottnest தீவில் ஏழு பேருடன் பயணித்த கடல் விமானம் )seaplan) விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விமானி உட்பட ஏழு பேருடன் நீரில் மூழ்கிய விமானத்திலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் வைத்தியிசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஏனையோரை மீட்பதற்குரிய தேடுதல் பணி இடம்பெற்ற நிலையில், அவர்கள் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆஸ்திரேலிய பிரீமியர் இன்று காலை இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
பேர்த்தில் வசிக்கும் 34 வயதான விமானி, 60 வயதான சுவிஸ் நாட்டு சுற்றுலாப் பயணி மற்றும் 65 வயதான டென்மார்க் சுற்றுலாப் பயணி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.