சர்வதேச விமான பயணத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவர் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று டார்வின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா பெங்களுரில் இருந்து சிட்னி விமான நிலையம் நோக்கி வந்த விமானத்தில் பயணித்த 46 வயது இந்தியர் ஒருவர், விமானத்தில் கூச்சலிட்டுள்ளார். எச்சில் துப்பியுள்ளார். விமான வழிகாட்டல்களையும் பின்பற்ற மறுத்துள்ளார்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் விமானக் குழுவினர் அவரை கட்டுப்படுத்தினர். இது பற்றி பெடரல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
விமானம் சிட்னி செல்வதற்கு முன் டார்வின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த பயணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால் விமானம் இரு மணிநேரம் தாமதமானது.