கோல்ட் கோஸ்ட் பகுதியில் வாகனத்துக்குள் இருந்த பெண்ணொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 33 வயதான பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். சிசிரிவி காட்சிகள் ஆராயப்பட்டுவருகின்றன. வாகனத்துக்குள் வேறு எவரேனும் இருந்தனரா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டுவருகின்றது.