இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள இராஜதந்திர விரிசல்களை சீர்செய்வதற்குரிய நடவடிக்கையில் ஆஸ்திரேலிய அரசு இறங்கியுள்ளது.
இதன்ஓர் அங்கமாக ஆஸ்திரேலிய சட்டமா அதிபர், இரு தரப்பு கலந்துரையாடலுக்காக விரைவில் இஸ்ரேல் செல்லவுள்ளார்.
ஒரு வாரகாலம் இஸ்ரேலில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ள அவர், அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் போர் விவகாரத்தில் ஆஸ்திரேலியா கடைபிடித்த அணுகுமுறை இஸ்ரேலை சினம் கொள்ள வைத்துள்ளது.
குறிப்பாக பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் எனவும், இரு நாடுகள் தீர்வு திட்டம் ஏற்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தி வருவதுடன், அது தொடர்பான ஐநா தீர்மானங்களையும் ஆதரித்துவருகின்றது.
மறுபுறத்தில் ஆஸ்திரேலியாவுக்குள் யூத விரோத சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. அண்மையில்கூட மெல்பேர்ணில் யூத வழிபாட்டு தலம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. அதனை சீர் செய்யும் விததாகவே யூத சமூகத்தை சேர்ந்த சட்டமா அதிபரை, அல்பானீஸி அரசு, இஸ்ரேலில் களமிறங்குகின்றது.